மீண்டும் சித்தப்பா ஆனார் தனுஷ்

90

இயக்குனர் செல்வராகவனின் திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு இன்னொரு அடையாளமாக அவரது மனைவி கீதாஞ்சலிக்கு நேற்று அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கடந்த 2011ல் செல்வாரகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்ததும் 2012 ஜனவரியில் அழகான பெண் குழந்தை பிறந்ததும் உங்களுக்கு தெரிந்த செய்திதானே.. இப்போது அந்த பெண்குழந்தை லீலாவதிக்கு, கூட விளையாட ஒரு தம்பி வந்துவிட்டான் என தம்பதிகள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.

தீபாவளிக்கு தான் இயக்கியுள்ள ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகளில் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் செல்வராகவன். இந்த நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது அவரது டென்ஷனை குறைத்திருப்பதோடு, இரண்டாம் உலகம் படத்திற்கு கிடைக்கப்போகும் வெற்றிக்கு அச்சாரமாகவும் நினைக்கிறார் என்றே சொல்லவேண்டும். தனுஷும் மீண்டும் சித்தப்பா ஆன சந்தோஷத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனது ‘நய்யாண்டி’ பட ரிலீஸுக்காக உற்சாகமாக காத்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.