‘ஆடுகளம்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்காக ஏற்கனவே ஒரு முறை பார்த்திபன் வீட்டு கதவை தட்டினார்கள் வெற்றிமாறனும் தனுஷும். ஆனால் அப்போது பார்த்திபன் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அதில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினார்.
ஆனால் மீண்டும் இந்தமுறையும் வெற்றிமாறன் மூலமாக அதிர்ஷ்டம் கதவைத்தட்ட, இப்போது கதவைத்திறந்து வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டார் பார்த்திபன். ஒருபக்கம் தான் இயக்கிவரும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வேலைகளை கவனித்துக்கொண்டே தற்போது வெற்றிமாறனின் இயக்கத்திலும் நடித்து வருகிறார் பார்த்திபன்.
“நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு நழுவிப்போகும்போது ரொம்பவே வருத்தப்படுவேன்.. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை அந்தமாதிரி நழுவவிட தயாராக இல்லை. இதில். நான் நடிக்கும் கேரக்டர் பாஸிட்டிவானது என்பதை மட்டும்தான் இப்போது என்னால் சொல்லமுடியும்” என்கிறார் பார்த்திபன்.