மூன்று படங்கள் தான் இயக்கியுள்ளார். ஆனால் பத்து படங்களில் கிடைக்கவேண்டிய வரவேற்பு இவருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. அவர் தான் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த். மாற்றான் படத்தை தொடர்ந்து ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார், விக்ரம் படத்தை இயக்கபோகிறார் என பல செய்திகள் அவரது படத்தை பற்றி வெளிவந்தன.
ஆனால் கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தனது அடுத்த படத்திற்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருப்பது நடிகர் தனுஷைத்தான். இந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கார்த்திக் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்குகிறது.