இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களை டைரக்ட் பண்ணி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு அமிதாப் பச்சன், நடிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார் பால்கி. இன்னொரு சிறப்பு செய்தியாக இந்தப்படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ்.
‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் இந்தியில் நடிக்கும் அடுத்த படமே பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான். தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் பால்கி படங்களின் நாயகர்கள் மாற்றுத்திறனாளிகளாகவோ அல்லது ஏதாவது நோய் குறைபாடு உடையவர்களாகவோதான் இருப்பார்கள். அந்த இலக்கணப்படி, இந்தப்படத்தில் சினிமாவில் நடிகராக விரும்புகிற, ஆனால் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியாக தனுஷ் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசை இளையராஜா, ஒளிப்பதிவு ஸ்ரீராம் என பால்கியின் ஆஸ்தான கூட்டணிதான் இந்தப்படத்திலும்.. மற்ற கேரக்டர்களுக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரையில் முறையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.