ஒருபக்கம் பரபரப்பான இயக்குனராக பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம், நடிப்பதற்காக தன்னைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வந்தால் அதையும் விடாமல் பிடித்துக்கொள்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.
சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தவர், பின்னர் ஈசன், சாட்டை, நீர்ப்பறவை உட்பட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக சாட்டை படத்தில் அவர் ஏற்றிருந்த பள்ளி ஆசிரியர் கேரக்டர் அவருக்கு நல்லபெயரை தேடிக்கொடுத்த்து.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிப்படங்களிலும் நடித்த சமுத்திரக்கனி, இப்போது தனுஷ் தயாரித்து நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.
அப்பா கேரக்டர் என்றதும் முதலில் தயங்கிய சமுத்திரக்கனி, கதையில் தனது ரோலுக்கு இருக்கிற முக்கியத்துவத்தைப் பார்த்து உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். படத்திற்கு கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.
மு.விஜயகுமார்