எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”.
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினுசக்ரவர்த்தி, ரவி மரியா, வனிதா, வி.ஞானவேல், சாமிநாதன், ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – டி. இமான்
பாடல்கள் – யுகபாரதி
கலை – சிவராஜ்
வசனம் – என். ராஜசேகர்
எடிட்டிங் – கோபிகிருண்ணா
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
நடனம் – தினேஸ், தினா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ்
மக்கள் – மௌனம்ரவி
கதை, திரைக்கதை, எழுதி, இயக்குகிறார் – எஸ். எழில்.
“தேசிங்கு ராஜா” படம் இம்மாதம் (ஆகஸ்ட் ) 23 ஆம் தேதி 350 திரையரங்குகளில் வெளியாகிறது. விமல் கதாநாயகனாக நடித்து அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் தேசிங்கு ராஜாதான் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் அவர்களும் இயக்குனர் எழில் அவர்களும் கூறினார்கள்.
ஏற்கனவே விமல் காமெடியில் கலக்கி எடுப்பார் இந்த படத்திலும் காமெடியில் கலக்கி இருக்கிறார் கூடவே சூரி உட்பட பல நடிகர்களும் காமெடியில் கூட்டு சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள்.