ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே?

74

கோச்சடையான் கதாநாயகி தீபிகா படுகோனேவிற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படத்தின் ஏழாம் பாகத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான தீபிகா படுகோனே தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை. சமீபத்தில் ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவிற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் ஏழாவது பாகத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஏற்கனவே நிறைய இந்திப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கான கால்ஷீட்டை கொடுக்க முடியாமல் தீபிகா திணறுகிறராம்.

வின் டீசல் கதாநாயகனாக நடிக்க உள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் ஏழாம் பாகத்தில் ஜேசன் ஸ்டேதம், ட்வெய்ன் ஜான்சன், பால் வால்க்கர் என ஹாலிவிட்டின் முன்னணி நடிகர்கல் நடிக்க உள்ளனர். ஏற்கனவே வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் ஆறு பாகங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை வாரிக்குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.