கோவை to பாட்னா – விறுவிறு முக்கோண ஆக்ஷனில் ஹரி

81


முக்கோண காதல் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன முக்கோண ஆக்ஷன்? இருக்கிறது என்கிறார் அதிரடி இயக்குனர் ஹரி.. ‘தாமிரபரணி’ படத்திற்குப்பின் தற்போது விஷாலை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தை இந்த முக்கோண ஆக்ஷனை மையமாக வைத்துத்தான் பின்னியிருக்கிறார்.

இந்தப்படத்தின் நாயகனும் நாயகியும் முற்றிலும் எதிர்பாராத இரண்டு கோணங்களில் இருந்து தங்களை தாக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அதுதான் இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் ஹரி.. இந்தப்படத்தின் கதை கோவையில் ஆரம்பித்து பீகார் மாநிலம் பாட்னாவில் முடிகிறதாம்.

இந்தப்படத்திற்காக சில தினங்களுக்கு முன்புதான் மலேசியாவிற்கு சென்று யுவன் சங்கர் ராஜாவிடம் ஆறு பாடல்களை கேட்டு வாங்கி வந்துள்ளார் ஹரி. பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். இதில் ஒரு பாடலை படத்தின் கதாநாயகியான ஸ்ருதிஹாசன் பாடுவார் என்று தெரிகிறது.

இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, சித்தாரா, கௌசல்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Comments are closed.