தமிழ்சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் பின்னணி பாடகி சின்மயி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே ” பாடல் மூலம் திரையிசை உலகில் காலடியெடுத்து வைத்த சின்மயிக்கு, இன்றும் ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்களில் ஒரு இடம் உண்டு.
அனைத்து ரசிகர்களையும் கொள்ளைகொண்ட நல்ல குரல்வளம் உள்ள சின்மயி, சிறந்த பின்னணி பாடகி மட்டும் அல்ல. பின்னணி குரல் கொடுப்பவர், நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல பன்முக திறமை படைத்தவர். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் பூமிகாவுக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் த்ரிஷா, ‘கோ” படத்தில் கார்த்திகா உட்பட இந்தியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த எமி ஜாக்சன் வரை, முப்பது படங்களுக்கு மேல் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
கர்நாடக இசை மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசையிலும் கைதேர்ந்த சின்மயி, இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு பாடல்கள் பாடியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் சின்மயி இன்னும் பல வெற்றிகள் பெற, இந்த பிறந்தநாளில் behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.