இயக்குனர் சேரன் தயாரிப்பாளராக மாறிய கதை நமக்கு தெரியும். ட்ரீம் தியேட்டர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘ஏமிட்டோ ஏ மாயா’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
ஆனால் இப்போது இதுவல்ல விஷயம். சேரன் புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அதற்கு ட்ரீம் சவுண்ட்ஸ் என பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் முதலில் வெளியிடுவது ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் பாடல்களைத்தான். செப்டம்பர் 15ஆம் தேதி ஆடியோ ரிலீஸ் நடைபெறவிருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகை ரோகிணி இயக்கிவரும் அப்பாவின் மீசை படத்தின் பாடல்களையும் இந்த நிறுவனம் தான் வெளியிடுகிறதாம்.