கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபுவின் டைரக்ஷனில் முதல் படமாக வெளியானது சென்னை-600028. சின்ன பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளியதோடு அந்தப்படத்தில நடித்த அனைவருக்கும் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. இந்தப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகிறது.
இந்தியில் லன்ச் பாக்ஸ் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்த விவேக் ரங்காச்சாரி இந்தப்படத்தை ரீமேக் செய்கிறார். டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் இவருடன் இணை தயாரிப்பாளராக சேர்ந்து தயாரிக்கிறார் இந்தப்படத்திற்கு இந்தியில் ‘கிர்கிட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
டேவிட் படத்தில் பிஜாய் நம்பியாரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த யாசத் என்பவர் படத்தை இயக்குகிறார். தமிழைப்போலவே இந்தி ரீமேக்கிலும் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவிருக்கிறார்கள்.