தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் சார்மி. ஆனால் தொடர்ந்து தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கே தனது திறமை மற்றும் கவர்ச்சியை சரியான விதத்தில் வெளிப்படுத்தியதால் ஆந்திர முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். முன்னைப்போல வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரங்களை தேடித்தேடி நடித்து வருகிறார் சார்மி.
தற்போது தனது உடல் எடையை குறைக்கும் வேலைகளில் சமீபகாலமாக இறங்கியிருக்கிறார் சார்மி. இதற்காக அவர் தனது சாப்பாட்டிலோ, தூக்கத்திலோ கை வைப்பதில்லையாம். மாறாக, படப்பிடிப்பு தளங்களில் கிடைக்கும் இடைவெளியின்போது உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து விடுகிறாராம். தனது உடல் எடை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூடவே எடைபார்க்கும் மிஷின் ஒன்றையும் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கிறாராம் சார்மி.
சார்மிக்கு தான் சந்திர மண்டலத்தில் செட்டிலாகிவிட்டது போல அடிக்கடி விசித்திரமான கனவு ஒன்று வருகிறதாம். மேலும் மொத்த தெலுங்கு சினிமாவும் சந்திரமண்டலத்திற்கு வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று சிலசமயம் வித்தியாசமான யோசனையும் வருகிறதாம்.