மலையாள மெகாஸ்டார் மம்முட்டி சினிமாவில் நுழையும் முன்னர் அடிப்படையில் வக்கீலாக பணிபுரிந்தவர். தனது பல படங்களில் வக்கீலாகவும் நடித்திருக்கிறார். தமிழில் 90களில் வெளியான ‘மௌனம் சம்மதம்’ அதற்கு ஒரு சிறந்த உதாராணம். இப்போது மலையாளத்தில் ‘தி ஜட்ஜ்மெண்ட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் மம்முட்டி.
தற்போது இந்தப்படத்தின் பெயரை ‘இது வேறோராள்’(இது வேற ஒரு ஆள்) என மாற்றி வைத்துள்ளார்கள். வி.கே.பிரகாஷ் என்னும் புதியவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த பல்லவி சந்திரன் என்பவர் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.