விஜய், மோகன்லால் நடித்துவரும் ஜில்லா படத்திற்கான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் ஆர்.டிநேசன்.. இதை முடித்துவிட்டு இரண்டு பாடல் காட்சிகளுக்காக பல்கேரியா நாட்டுக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது அந்த பிளானில் சிறிய மாற்றம்.. பல்கேரியா ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு ஜப்பானுக்கு பறக்க இருக்கிறது ஜில்லா படக்குழு.
பல்கேரியாவை ஏன் கேன்சல் செய்தீர்கள் என படத்தின் இயக்குனர் நேசனிடம் கேட்டால், “இன்னும் நமது தமிழ்சினிமாவில் காட்டப்படாத பல அற்புதமான பகுதிகள் பல்கேரியாவில் இருக்கின்றன. நாங்கள் பாடல் காட்சிகளுக்காக ஒன்பது விதமான இடங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். ஆனால் இப்போது அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை படப்பிடிப்புக்கு ஏற்றதாக இல்லை. அதனால் தான் ஜப்பனுக்கு செல்ல இருக்கிறோம்” என்கிறார்.
ஜப்பானில் ஒசாகாவில் ஒரு டூயட் பாடலை படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக இந்தமாத இறுதியில் ஜப்பானுக்கு கிளம்ப இருக்கும் ஜில்லா படக்குழுவினர் இந்தப்படத்திற்காக வெளிநாடு கிளம்புவது இதுதான் முதல்முறை. இது குடும்பப்பாங்கான படம் என்பதால் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார்களாம்.