துளிர்விடும் நட்பு : டென்ஷன் குறைந்த பாண்டிராஜ்

92

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம்தான் இந்த மாயத்தை செய்து வருகிறது..

நயன்தாரா தான் கதாநாயகி என அறிவிக்கப்பட்டதுமே, சரிதான் இயக்குனர் பாண்டிராஜுக்கு இனி டென்ஷன் மேல் டென்ஷன் தான் என பலரும் நினைத்திருக்க, அவரோ கூலாக சிம்பு, நயன்தாராவை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சரி.. நடிக்கும்போதும் சரி.. சிம்பு, நயன்தாரா இருவருமே இயல்பான நட்புடன் தான் பேசிக்கொள்கிறார்கள். ஷாட்டிலும்கூட பாண்டிராஜ் சொல்லும் சொல்லும் எதையும் மறுக்காமல், காட்சிக்கேற்ப அன்னியோன்யமாகவும் நடித்துக்கொடுக்கிறார்கள். ஷாட் முடிந்தபின் அவரவர் கேரவனுக்கு கூட செல்லாமல் வெளியிலேயே நாற்காலியில் அமர்ந்து உரையாடுகிறார்கள்.

சமீபத்தில் சிம்பு கொடுத்த பிறந்தநாள் விருந்தின்போது நயன்தாராவும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காலத்துக்குத்தான் எதையும் மாற்றும் சக்தி இருக்கிறதே.. ஆகவே எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்..

Leave A Reply

Your email address will not be published.