சேரன் பிரசன்னா நடித்த ‘முரண்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில்தான் தனது முதல் படத்தை இயக்கினார். தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ராஜன் மாதவ். படத்தின் பெயர் ‘உலா’. இந்தப்படத்தில் விதார்த், அஜ்மல், ‘பிடிச்சிருக்கு’அசோக் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் மிகப்பெரிய புதுமை ஒன்றை செய்யவுள்ளார் ராஜன் மாதவ். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவானான பிராவோவை இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்கப்போகிறார். இதற்காக படத்தின் தயாரிப்பாளர் எல்.வி.ஸ்ரீகாந்துடன் சேர்ந்து ஒரு பொதுவான நண்பர் மூலமாக பிராவோவை சந்தித்திருக்கிறார் ராஜன் மாதவ். பிராவோவும் உற்சாகமாக படத்தில் நடனமாட சம்மதித்து விட்டாராம்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக வலம் வரும் பிராவோவுக்கு சென்னையும் தமிழ்ப்படங்களும் ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். அதனாலேயே இந்தப்படத்தில் நடனமாட ஒத்துக்கொண்டாராம். வரும் வாரத்தில் இதற்கான படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். பிராவோ ஆடப்போகும் இந்தப்பாடலுக்கு இசையமைப்பவர் ராஜன் மாதவின் தம்பியான சாஜன் மாதவ். பல கதைகளின் தொகுப்பாக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.
Very interesting points you have observed, thank you for posting.Blog monetyze