சசிகுமாருக்கு கிராமத்திலிருந்து நகரத்துக்கு புரோமோஷன் கொடுத்திருக்கும் படம் தான் ‘பிரம்மன்’. சசிகுமாரின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் டான்ஸ், ஃபைட் என கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார் சசிகுமார். சசிகுமாருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். சந்தானம், சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் துள்ளலாக இசையமைத்துள்ளார். இந்தமாத இறுதியில் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.