இயக்குனர் எம்.ராஜேஸை பொறுத்தவரை. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் ராஜேஸுக்கு கைகொடுக்க முன்வந்தார் ஆர்யா. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் ஏற்கனவே ருசித்த வெற்றிபோல இன்னொரு வெற்றிக்கு தயாராகிவிட்டது இந்தக் கூட்டணி. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாக இருக்கிறது.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலம் இந்தப்படத்தை தயாரிக்கிறார் ஆர்யா. மேலும் படத்தின் ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தில் ராஜேஸின் வலதுகரமான சந்தானமும் உடன் கைகோர்க்கிறார். ஆனால் இந்தப்படத்தின் கதாநாயகி மட்டும் நயன்தாரா இல்லை.. அதற்கு பதிலாக தமன்னாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. இந்த தகவலை தமன்னாவே உறுதி செய்துள்ளார்.
Comments are closed.