பிரியாணி படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள பிரியாணி படத்தின் இசைவெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விமரிசையாக நடத்த முடிவு செய்திருந்தது ஸ்டுடியோகிரீன் நிறுவனம். காரணம் இது யுவனின் 100வது படம் என்பதுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிதான் யுவனின் பிறந்தநாளும்கூட. ஆனால் இருதினங்களுக்கு முன்னால் ‘பிரியாணி’ படத்தின் எட்டுப் பாடல்களையும் யாரோ திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடவே அதிர்ச்சியடைந்தது படக்குழு.
அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் கிண்டியில் உள்ள ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்குச் சென்ற பிரியாணி படக்குழுவினர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர். அத்துடன் பிரியாணி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் நாளை மறுநாள்(ஆகஸ்ட்-21) நடத்த முடிவு செய்துவிட்டார்களாம்.