விஜயசாந்தி நடித்த ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படம் மாதிரி ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடித்துவிட வேண்டும் என்பது பல நடிகைகளுக்கு ஒரு கனவாக இருக்கும். தெலுங்கில் விஜயசாந்தி என்றால் இதே மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கென்றெ பிறந்தவர் வாணி விஸ்வநாத். நம்ம சினேகா கூட ‘பவானி ஐ.பி.எஸ்’ என்ற படத்தில் நடித்து தனது போலீஸ் கனவை நிறைவேற்றிக்கொண்டார். படம்தான் சரியாக போகவில்லை.
அந்த வரிசையில் இப்போது நம்ம அமுல்பேபி பாவனாவும் மலையாளத்தில் ‘பாலிடெக்னிக்’ என்ற படத்தில் எஸ்.ஐ.அஸ்வதி நாயர் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.
இந்தப்படம் சம்பந்தப்பட்ட தனது புகைப்படங்களை தனது சமூக வலைதளத்திலும் பதிவேற்றி வருகிறார் பாவனா. அதற்கு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. படம் வந்தால் தெரிந்துவிடப்போகிறது, இவர் ‘கம்பீரம்’ பட லைலாவா? இல்லை விஜயசாந்தியா? என்று.