மரியான் பரபரப்பிலிருந்து வெளிவந்துவிட்ட தனுஷ், நய்யாண்டி, வேலையில்லா பட்டதாரி, அனேகன் என வேறு தளத்துக்கு தாவிவிட்டார். ‘நய்யாண்டி’ கூட வரும் 11ஆம் தேதி ரிலீஸாகப் போகிறது. அதேமாதிரி மரியான் படத்தின் இயக்குனர் பரத்பாலாவும் இப்போது தனது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். தற்போது இந்தப்படத்திற்கான கதையை மும்முரமாக எழுதி வருகிறார். ஸ்கிரிப்ட் பக்காவாக தயாரானதும் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை அறிவிப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பரத்பாலா.