இயக்குனர்கள் பாலா, மிஸ்கின் ரெண்டுபேருமே தங்களது படைப்புகள் ரீதியாக வேறு வேறு துருவங்கள் தான். இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை துணிச்சல். யாருக்காகவும் தங்களது படைப்புகளில் துளிகூட சமரசம் செய்துகொள்ளாத துணிச்சல். ‘பரதேசி’ ஒருவகையான துணிச்சல் என்றால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வேறுவகையான துணிச்சல். அதுதான் இப்போது இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் இணைய வைத்திருக்கிறது.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால் சற்று ரிலாக்ஸான மிஸ்கின், சமீபத்தில் இயக்குனர் பாலாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டின் அவுட்லைனை சொல்லியிருக்கிறார். அதில் இம்ப்ரெஸ் ஆன பாலா அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி மிஸ்கினை திகைப்பில் ஆழ்த்திவிட்டாராம். அடுத்த மாதத்தில் இருந்து வேலையை துவங்க உள்ளார் மிஸ்கின்.