‘பாஹுபலி’ டப்பிங்கை ஆரம்பித்தார் ராஜமௌலி..!

70

 

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மட்டுமல்ல, படத்தில் நடிக்கும் பிரபாஸ், அனுஷ்கா இருவருக்குமே கனவுப்படம் என்று சொல்லும் வகையில் நீண்டகால தயாரிப்பாக, அதேசமயம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது ‘பாஹுபலி’ திரைப்படம்.. இது தமிழில், ‘மகாபலி’ என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.

தற்போது மகாபலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று முடிந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இந்தப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். முடிந்தவரைக்குமான காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. தமிழிலும் விரைவில் டப்பிங் பணிகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

மீண்டும் இன்றிலிருந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அக்டோபர் மாதத்தில் இந்தப்படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் ராஜமௌலி. படம் 2015ல்தான் வெளியாக இருக்கிறது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே..

Comments are closed.