ஆரம்பம் படம் தீபாவாளிக்கு ரிலீஸாகப் போகுதுன்னு தெரிஞ்சாலும் ‘தல’ ரசிகர்களை தீபாவளி வரைக்கும் ஒரு எதிர்பார்ப்புடன் குஷியாக வைத்திருக்கவேண்டும் என்றால் பாடல்களை ரிலீஸ் பண்ணினால்தானே ஆச்சு. இப்போது ரசிகர்களுக்கு அந்த இனிப்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள். செப்டம்பர்-19ஆம் தேதி ஆரம்பம் படத்தின் பாடல்களை மிகவும் எளிமையான முறையில் வெளியிடுகிறார்கள்.
அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா, ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்ஸி, வில்லனாக ராணா, இசைக்கு யுவன்சங்கர் ராஜா, பவர்ஃப்புல்லான விஷ்ணுவர்தன் டைரக்ஷன் என ஒரு பக்கா எண்டெர்டெயிண்ட்மென் பேக்கேஜாக உருவாகியிருக்கும் ஆரம்பம் தீபாவளி தினத்தன்று பத்தாயிரம் வாலா பட்டாசாக அதிரவைக்கப்போகிறது.