அஞ்சலிக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட்!

95

அஞ்சலிக்கும் இயக்குனர் மு.களஞ்சியத்துக்கும் நடந்த பிரச்சனைகள் ஊரறிந்த விஷயம் தான். அதனால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அஞ்சலி பேசியதாகவும் செயல்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் மு.களஞ்சியம்.

இதனை விசாரித்த நீதிமன்றம் அஞ்சலியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஒன்று. இரண்டல்ல. கிட்டத்தட்ட பத்துமுறை சம்மன் அனுப்பியும் அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் தற்போது அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத அரெஸ்ட்வாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இதன்மூலம் அஞ்சலி நீதிமன்றத்திற்கு வந்தே ஆகவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் சட்டத்துடன் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடிய அஞ்சலி, அதன் பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.