செல்வராகவன் இயக்கியுள்ள இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார் என்று தெரியும். இதில் அனிருத் எப்படி உள்ளே வந்தார் என்ற கேள்வி எழுகிறதா? உடனே நீங்களாக எதுவும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டாம். நீங்கள் நினைக்கிற மாதிரி செல்வாவுக்கும் ஹாரிஸுக்கும் பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை.
தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துவிட்டார் செல்வராகவன். ஆனால் பின்னணி இசைக்கோர்ப்பு வேலை அப்படியே பாக்கி இருக்கிறது ஹாரிஸோ மற்ற படங்களின் வேலைகளில் பிஸி. என்ன செய்வது என செல்வா கையைப் பிசைய, ஹாரிஸ் தானாகவே முன்வந்து, பின்னணி இசையை அனிருத்தை வைத்து முடித்துக்கொள்ளுங்கள் என யோசனை தெரிவித்தாராம்.
அதன்பின் ‘கொலவெறி’யுடன் அனிருத் களத்தில் குதிக்க, இப்போது பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பின்னணி இசை வேலைகளின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக புடாபெஸ்ட் நகருக்கு செல்லவிருக்கிறார் அனிருத்.