எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. ‘பிரம்மன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாடா வாடா நண்பா’ பாடல் நிச்சயமாக சூப்பர் ஹிட்டாகும், பின்னே, பாடலை பாடியிருப்பது ஆண்ட்ரியா அல்லவா..? இயக்குனர் சசிகுமார், லாவண்யா த்ரிவேதி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் இந்த ’பிரம்மன்’ படத்தை சாக்ரடீஸ் இயக்கியுள்ளார்.
இந்த பாடலுக்கு முதலில் பலர் பரிசீலிக்கப்பட்டு, கடைசியாக ஆண்ட்ரியாவையே நடனம் ஆடசொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் கேட்ட தொகை தயாரிப்பாளர்களை திகைக்க வைக்கவே, தற்போது அந்தப்பாடலுக்கு ஆடியிருகிறார் பத்மபிரியா. இவர் கடைசியாக இயக்குனர் ராமின் ‘தங்கமீன்கள்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.