டான்ஸ் மாஸ்டரை ஸ்டண்ட் மாஸ்டராக்கிய ‘யங் மங் சங்’..!

‘தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா கதாநாயகனாக நடித்துவரும் படம் பெயர் ‘யங் மங் சங்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

அடிப்படையில் டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறார் என்பது ஸ்பெஷல் அம்சம். கிட்டத்தட்ட எண்பதுகளில் வெளியான மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களின் பிரதிபலிப்பாக இது இருக்குமாம். இந்தப்படத்திற்காக குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளை கற்றுகொன்டாராம் பிரபுதேவா.

இவருக்கு வில்லனாக நடிப்பவர் ‘பாகுபலி’ படத்தில் காளகேயர் தலைவனாக அசத்திய பிரபாகர் தான். முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகனும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பாடல்கள் மூலம் பிரபலமான இசையமைப்பாளருமான அம்ரீஷ் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Prabhudevayung mung chungபிரபுதேவாயங் மங் சங்