ஐந்து நண்பர்கள்.. அவர்களில் ஒருவருக்கு ‘நீ சாகவேண்டும்’ என்கிற வாசகம் தாங்கிய அவர்களது போட்டோ ஒன்று எம்.எம்.எஸ் ஆக வருகிறது. அதற்கேற்ற மாதிரி அவரது மரணமும் நிகழ்கிறது.. தொடர்ந்து அடுத்த நபரும் இதே ரீதியில்இறக்க, அதற்கு காரணமாக பின்னணியில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாக உணர்கிறார்கள்.
போலீஸும் தீவிர விசாரணையில் இறங்குகிறது. இவர்கள் ஐந்து பேரையும் இணைக்கும் ஏதோ ஒரு மோசமான சம்பவம் ஒன்று, இதன் பின்னணியில் உள்ளதாக சந்தேகித்து இறுதியில் அந்த முடிச்சையும் கண்டுபிடிக்கின்றனர். மீதி உள்ளவர்கள் தப்பித்தார்களா..? இந்த கொலைகளுக்கு காரணமானவர் யார் என்பது க்ளைமாக்ஸ்.
பிரமாண்டமான அபார்ட்மென்ட், நாலைந்து சாப்ட்வேர் கம்பெனி இளைஞர்கள், அவர்களை மிரளவைக்கும் ஒரு பேய் இவற்றை வைத்து வெளியாகி இருக்கும் இன்னொரு படம் தான் ‘யூகன்’. இந்த ஐந்த பேரில் வினய் தான் நம்மை கொஞ்சம் கவன ஈர்ப்பு செய்கிறார்.
பூஜாவாக வரும் சாக்சி அகர்வாலின் கதாபாத்திர படைப்பு படு வித்தியாசம்.. பின்னே அம்மாவை ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்காக கூட்டி வந்தவர், தனக்கு இன்டர்வியூ இருக்கு என கூறி அவரை அம்போவென விட்டுவிட்டு கிளம்புவரா என்ன..?
கொலைகளை துப்பறிவதற்காக காவல்துறை அதிகாரிகளாக வரும் இருவரும் பொருத்தமான தேர்வு.. அபார்ட்மென்ட்டில் பேய் பயப்படுத்தும் காட்சிகள் சமீபத்திய பல படங்களில் பார்த்து தான். இருந்தாலும் க்ளைமாக்ஸில் கொலைகளை யார் செய்தது என ஒரு ட்விஸ்ட் வைத்து முடித்திருப்பது பரவாயில்லை.
யூகன் – வழக்கமான இன்னொரு பேய்ப்படம்