ஆர்யா ஒரு புறம்போக்கு..! கிருஷ்ணா ஒரு புறம்போக்கு..!!

“ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும் போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா. முடிந்ததா என்று தோன்றாது. அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல்” இப்படி சொல்வது சாட்சாத் இயக்குனர் விஷ்ணுவர்த்தனே தான். அதனால் தான் இருவராலும் ‘யட்சன்’ படம் வரை ஐந்தாவது முறையாக கூட்டணியை தொடர முடிந்துள்ளது.

இனொரு ஆச்சர்யமான விஷயம் முதன் முதலில் தனது தம்பி கிருஷ்ணாவையும் இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக்கி நடிக்கவைத்து இயக்கியதுதான். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் கதை..? “இது இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும் கதை. நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்சன், காமெடி எல்லாமே சரிவிகிதத்தில் இருக்கும்” என்கிறார் விஷ்ணுவர்த்தன்.

கதாநாயகிகளாக ஸ்வாதி, தீபா சன்னிதி நடித்துள்ளனர். பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் விஷ்ணுவர்த்தன் – யுவன் கூட்டணி என்று சொல்வது போல விஷ்ணுவர்தனின் எல்லாப் படங்களுக்குமே யுவன் சங்கர்ராஜாதான் இசையமைத்து வருகிறார்.. இதிலும் கலக்கலாக 5 பாடல்களை தந்துள்ளாராம். இந்தப்படத்தை விஷ்ணுவர்தன் பிக்சர்ஸுடன் யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது

ஆர்யாகிருஷ்ணாயட்சன்