கபடி விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள ‘யார் இவன்’..!

மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரஸ்யமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘யார் இவன்’ படம். அதேசமயம் இது ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படமும் கூட. இந்தப்படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கபடியை பின்னணியாக கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை இயக்குனர் டி.சத்யா இயக்கியுள்ளார்..

இவர் படகோட்டி பட இயக்குனரான டி.எஸ்.பிரகாஸ்ராவின் பேரன் ஆவார்.. தெலுங்கில் பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட டி.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் இது. சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

D SathyaYar Ivanடி.சத்யாயார் இவன்