அதிகவிலைக்கு போன ஆதி படம் ; மேமாதம் மெகா ரிலீஸ்..!

சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். இப்போது இதே தலைப்பில் ஆதி நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘யாகாவாராயினும் நா காக்க’ ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு எவ்வளவுதூரம் கொடிய விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதே கதை.

கல்லூரியில் கடைசி ஆண்டில் படிக்கும் 4 இளைஞர்கள் டிசம்பர் 31ல் புத்தாண்டு கொண்டாடத் தொடங்க அப்போது அங்கு பேசப்பட்ட பேச்சு அவர்களைப் படுத்தும் பாடுதான் கதைப் போக்கு. அமெரிக்காவில் டைரக்சன் கோர்ஸ் முடித்து சிறந்த மாணவர் விருது பெற்ற ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் பினி செட்டிதான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி. இதில் வினோதம் என்வென்றால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது நிக்கி அவ்வளவாக பாப்புலர் இல்லை.. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் அவரது மார்க்கெட் ஏறிவிட, படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.

இந்தப்படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் உரிமையை க்ளோபல் யுனைடெட் மீடியா என்கிற நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கியுள்ளது. ஆதியின் படங்களிலேயே அதிக விலைக்கு போனது இந்தப்படம் தானாம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை வரும் மேமாதம் மெகா ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

AadhiYagavarayinum Naa Kaakka Movieஆதிசத்யபிரபாஸ்நிக்கி கல்ராணியாகாவாராயினும் நா காக்க