காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது ‘யார் இவன்’.. இந்தப்படத்தில் புதுமுகம் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கபடியை பின்னணியாக கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை இயக்குனர் டி.சத்யா இயக்கியுள்ளார்.. இவர் படகோட்டி பட இயக்குனரான டி.எஸ்.பிரகாஸ்ராவின் பேரன் ஆவார்..
இந்தப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்துவிட்டு, படத்தின் ஹீரோ சச்சினை நேரில் பார்ப்பதற்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது. கோடீஸ்வர தொழிலதிபரான இவர் இந்தப்படத்திற்காக, குறிப்பாக சண்டைக்காட்சிகளில் எவ்வளவு தூரம் மெனக்கெட்டுள்ளார் என்பதையும் அதற்கான நம்பகத்தன்மையும் ட்ரெய்லரில் தெரிகிறது.
இந்தப்படத்தில் கபடியை மையப்படுத்தி கதையை அமைத்துள்ளார் இயக்குனர் சத்யா. கபடி விளையாட்டின் டெக்னிக்குகளை வைத்து ஹீரோ எதிரியை வீழ்த்தும் விதமாகவும் ஹீரோ உண்மையில் ஹீரோவா இல்லை வில்லனா என்கிற சஸ்பென்ஸ் படம் முழுக்க இறுதிவரை பயணிக்குமாறும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்..