ஷாவ்மி இந்தியா புதிய REDMI 15C 5G ஸ்மார்ட்போனை கண்கவர் டிசைன் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் செயல்திறனுடன் அறிமுகப்படுத்தியது
சென்னை: ஷாவ்மி இந்தியா தனது புதிய REDMI 15C 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்கவர் டிசைன், 17.53 செ.மீ. HD+ இம்மர்சிவ் டிஸ்ப்ளே மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வேலை மற்றும் பொழுதுபோக்கு இடையே தடையின்றி மாறி பயன்படுத்தும் பயனர்களுக்காக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்லைட் ப்ளூ, டஸ்க் பர்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் இந்த மாடல், 3D குவாட்-கர்வ்டு பின்புறம் மற்றும் ஃப்ளோட்டிங் கார்ட்டர் கேமரா டிசைனுடன் வருகிறது.
அறிமுகத்தை குறித்து பேசிய ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் அனுஜ் சர்மா அவர்கள், “REDMI 15C 5G மூலம் அன்றாட பயனர்களுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்குவதே எங்களின் நோக்கம். பெரிய டிஸ்ப்ளே, நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி மற்றும் ராயல் டிசைன் ஆகியவை மக்கள் தங்கள் மொபைல் போன்களை இன்று எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன. எதிர்காலத்திலும் பயனர்களுக்கு உண்மையில் தேவையானவற்றை மையமாக கொண்டு REDMI அனுபவத்தை மேம்படுத்துவோம்” என்றார்.
மீடியாடெக் டிமென்சிட்டி 6300 புராசஸர், 50MP AI டூயல் கேமரா, 6000mAh பேட்டரி, 33W டர்போ சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் வரும் REDMI 15C 5G, Xiaomi HyperOS 2 இயங்குதளம் மற்றும் பல ஸ்மார்ட் இணைப்பு வசதிகளையும் உடையது. 4GB+128GB, 6GB+128GB மற்றும் 8GB+128GB ரகங்களில் கிடைக்கும் இது, முறையே ரூ.12,499, ரூ.13,999 மற்றும் ரூ.15,499 என விலை இடப்பட்டுள்ளது.