வேதநாயகி குரூப் ஆஃப் கம்பெனி’யில் இருந்து வேதநாயகி ஃபிலிம்ஸ் என்ற இன்னொரு நிறுவனத்தை ஆரம்பித்து ‘அலையே அலையே’ படத்தை தயாரித்திருப்பதன்
மூலமாக சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் அதன் நிறுவனர் குமார். குமாரின் பள்ளித்தோழரான மணிகண்ட குமார்தான் படத்தை இயக்கியுள்ளார்.
டி.இமானிடம் கீபோர்டு பிளேயராக பல வருடம் பணியாற்றிய தன்வி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அலையே அலையே’ படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்க்கும்போதே ராமேஸ்வரத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும் பாம்பன் பாலத்தை இவ்வளவு நெருக்கமாக பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.
கதாநாயகன் ‘மானாட மயிலாட’ புகழ் ரஞ்சித். கதாநாயகியாக நடித்திருக்கும் நயனா நேரில் பார்க்கும்போது குட்டிப்பூனையாய் தெரிபவர் படத்தின் பாடல் காட்சிகளில் பார்க்கும்போதே மனதை அள்ளுகிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஜய்சேதுபதி, டி.இமான் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான குமார், “படத்தை தயாரிக்க, திட்டமிடுதலும் முன் அனுபவமும் வேண்டி ஒரு கம்பெனியில் புரொடக்ஷன் பாயாக ஒரு மாதம் வேலை
பார்த்தேன்” என்று சொன்னார். சினிமாவில் இந்த அளவிற்காவது தெளிவான சிந்தனை இருந்தால் தான் நல்ல படங்களை தரமுடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.
விழா நிகழ்ச்சிகளை இலங்கைத் தமிழர் ஒருவர் அப்துல் ஹமீது போன்ற தனது இனியகுரலால் தொகுத்து வழங்கியது வித்தியாசமாகவும் அதேசமயம் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.