முன்பு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்தார் கமல். அதன்பின் வந்த காலங்களில் வருடத்திற்கு ஒன்று என்கிற கணக்கில் அது சுருங்கியது. ஆனால் இதோ இப்போது இந்த வருடத்தில் நடிக்க ஆரம்பித்த படங்களான ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டன.
இப்போது ‘பாபநாசம்’ படத்திற்கான டப்பிங்கையும் ஆரம்பித்துவிட்டார் கமல். ஆனால் இன்னும் விஸ்வரூபம்-2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற விபரம் மட்டும் சிதம்பர ரகசியமாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் தான் இந்தப்படத்தை தயாரித்துவருகிறது. தற்போது படத்தின் உண்மை நிலை என்ன என்பது பற்றி கமல் மௌனம் கலைத்திருக்கிறார்.
‘விஸ்வரூபம்-2’வின் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது. ஒரு படம் துவங்கும் முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அப்படத்தின் விதியை எந்த அமானுஷ்ய சக்தியும் தீர்மானிப்பதில்லை” என்று கூறியுள்ளார் கமல்.