‘மய்யம்’ படத்தின் பாடல்களை கமல் வெளியிட்டது ஏன்…!

மேலே உள்ள கேள்விக்கு ஒன்றல்ல.. பல பதில்கள் உள்ளன. ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ‘மய்யம்’ என வைத்துள்ள டைட்டிலே கமலிடம் அவர் நல்லமூடில் இருக்கும்போது கேட்டு வாங்கியதுதான். இருபது வருடங்களுக்கு முன் கமல் ரசிகர்களுக்காக வெளியான இதழின் பெயர்தான் ‘மய்யம்’.

அதுமட்டுமல்ல கமலின் வீட்டில் பல இடங்களில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த ஓவியங்கள் தான் அலங்கரிக்கின்றன. அந்த அளவுக்கு கமலின் நட்பு வட்டாரத்தில் இடம்பிடித்தவர் ஏ.பி.ஸ்ரீதர் இன்னொரு முக்கிய காரணம் இவரது தயாரிப்பு நிறுவனமான ஸ்கெட்ச்புக் புரடக்சனை துவங்கிவைத்தவர் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான். இது போதாதா..?

இவ்வளவு விஷயங்களை விட இன்னொன்றும் இருக்கிறது. எப்போதும் புதியவர்களை, இளைஞர்களை ஊக்கப்படுத்துபவர் கமல்.. இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ள இயக்குனர் உட்பட பல இளைஞர்கள் திரைத்துறைக்கு புதியவர்கள்.. இப்போதும் கல்லூரிக்கு சென்று வருபவர்கள்.. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத்த்தான் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து ‘மய்யம்’ படத்தின் ஆடியோவை கௌதமியுடன் இணைந்து வெளியிட்டார் கமல்.

ஏ.பி.ஸ்ரீதர்கமல்கே.பாலசந்தர்கௌதமிமய்யம்ஸ்கெட்ச்புக் புரடக்சன்