இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை ஒழித்துக்கட்ட களமிறங்கிய ‘எக்ஸ் வீடியோஸ்’ இயக்குனர்..!

கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.

நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.

இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.”

“இந்த ஆபாச இணைய தளங்களை வளைகுடா நாடுகளில் அனுமதிப்பதில்லை. நம் அருகில் உள்ள பாகிஸ்தானில் கூட தடை செய்து உள்ளனர். நம் நாட்டிலும் இதை ஒழித்துக் கட்டலாம். அதற்கான முன் முயற்சியை நான் தொடங்கி விட்டேன் உங்கள் ஆதரவு தேவை” என்கிறார் இந்தப்படத்தை இயக்கியுள்ள சஜோசுந்தர்.

சஜோசுந்தர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் “இந்தப் படத்தைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெண் பிரபலங்களுக்கான காட்சி ஒன்றும் திரையரங்குகளில் முதல் காட்சியைப் பெண்களுக்கென்றும் திரையிட இருக்கிறோம்.” என்றார்.

கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது

HariSajo SundarXvideosஎக்ஸ் வீடியோஸ்சஜோசுந்தர்பிரகாஷ் ராஜ்ஹரி