“ஒரு இயக்குனருக்கு உண்மையான வெற்றி எது..?” சுசீந்திரனின் பார்வை இது தான்..!

சுசீந்திரன் இயக்கத்தில் வரும் நவ-1௦ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப்படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, “இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.

இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார். புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய library-ல் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும். மிக பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்.

‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படங்களை போல் இதில் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் இருக்கும். இந்தப்படத்தின் கதை உங்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்” என உறுதியாக சொல்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

‘ராஜபாட்டை’அழகர் சாமியின் குதிரைசந்திப்சுசீந்திரன்ஜீவாநான் மகான் அல்லநெஞ்சில் துணிவிருந்தால்பாண்டியநாடுமாவீரன் கிட்டுமெஹரின்விக்ராந்த்வெண்ணிலா கபடி குழு