வரிசை தெரியும்.. அது என்ன வரிசி…?


கார்த்திக் தாஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாக இருக்கும் திரைப்படம் வரிசி. இது பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம். அந்த வகையில் அறிமுக இசை அமைப்பாளர் நந்தா இசையில் தயாராகியிருக்கும் ‘வரிசி’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

‘வரிசி’ படத்தில் கார்த்திக் தாஸூக்கு ஜோடியாக அறிமுக நடிகை சப்னா தாஸ் நடிக்க, இவர்களுடன் அனுபமா குமார், கணேஷ் பாலாஜி சந்திரசேகர், துஷாரா, கிருஷ்ணா, ஜெயஸ்ரீ, ஆவீஸ் மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திட்டமிட்டப்படி சிறிய பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் ‘வரிசி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குனரும், நடிகருமான கார்த்திக் தாஸ் பேசுகையில்,’ குறும்படங்களை இயக்கி இணையதள பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்த நம்பிக்கையில் ‘வரிசி’ படத்தை இயக்கி இருக்கிறேன். ‘வரிசி’ என்றால் ‘தூண்டில்’ என பொருள். மீனவர்களிடத்தில் இந்த சொல் எளிமையாக புழங்கும் சொல். கதைக்கு பொருத்தம் என்பதால் இதனை சூட்டி இருக்கிறோம். கதையில் நான்கு ஜோடிகளின் வாழ்வியலை கமர்ஷியல் அம்சங்களுடன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். ‘ என்றார்.

Karthik Dosssapna dossVarisi Movieஅனுபமா குமார்ஆவீஸ் மனோஜ்கணேஷ் பாலாஜி சந்திரசேகர்கிருஷ்ணாசப்னா தாஸ்ஜெயஸ்ரீதுஷாரா