ஷங்கருடன் இணைந்து புலிகேசி-2ஆம் பாகத்தை தயாரிக்கிறது லைக்கா.!

இயக்குனர் ஷங்கர் தயாரித்த படங்களில் அவருக்கு நல்ல லாபத்தையும், இன்றளவும் சொல்லிக்கொள்கிற அளவில் பெயரையும் சம்பாதித்து கொடுத்த படம் தான் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’.. சிம்புதேவனை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்தியதோடு, வடிவேலுவையும் கதாநாயகனாக்கி அழகு பார்த்தது இந்தப்படம் தான்.

ஆனால் இந்தப்படம் வெளியாகி இத்தனை நாட்களாகியும் ‘புலிகேசி கதாபாத்திரத்தின் மவுசு குறையாமல் இருப்பதால் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன இயக்குனர் சிம்புதேவன் சில வருடங்களாகவே யோசித்து வந்தார்.. அதன்பின் ஸில் படங்களை இயக்கி, கடைசியாக விஜய்யை வைத்து ‘புலி’ படத்தையும் இயக்கிய சிம்புதேவனுக்கு ‘புலிகேசி’ தவிர மற்றெந்த படங்காலும் வெற்றியை தரவில்லை.

அதேபோல வடிவேலுவும் தெனாலி ராமன், எலி படங்களில் நடித்து, அவை வரவேற்பு பெறாத நிலையில், மீண்டும் ஒரு ஹிட் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்துவைக்க விரும்புகிறார்.. ஆக, ஒன்றும் ஒன்றும் இரண்டும் என்கிற கணக்கில் இந்த இருவரும் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இணைகின்றனர். இந்தப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஷங்கர்.

Director ShankarImsai Arasan 23m PulikesiLycaSimbu DevanVadivelu