“லதா ரஜினிக்கு இடையூறு இல்லாமல் நாங்களே கடனை அடைப்போம்” – மீடியா ஒன் உத்தரவாதம்..!

 

ரஜினி நடித்து அவர் மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தை தயாரித்த வகையில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் இருந்து 2௦ கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. அதை திருப்பி செலுத்த தவறியதால், அதற்கு பிணையாக லதா ரஜினி கொடுத்திருந்த சொத்துக்களின் மீது கிட்டத்தட்ட ஏல நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சென்றது எக்ஸிம் வங்கி..

ஆனால், ‘வியாபாரத்தில் லாப, நட்டம் சகஜம்.. நாங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்பதால் நாங்கள் வாங்கிய கடனை நாங்களே செலுத்தி விடுவோம்.. அதுவும் வரும் மார்ச்-31க்குள் கடனை செலுத்திவிடுவோம்.. இதற்காக எங்களுக்கு பிணையாக தனது சொத்துக்களை அளித்த லதா ரஜினிக்கும் அவரது சொத்துகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் நாங்கள் வங்கியுடன் பேசியுள்ளோம்” மீடியா ஒன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முரளி மனோகர் இன்று மீடியாக்களிடம் அறிவித்தார்.

கோச்சடையான்சௌந்தர்யாமீடியா ஒன் குளோபல் நிறுவனம்முரளி மனோகர்லதா ரஜினி