காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்திற்க்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக, ஏன் சினிமா தியேட்டர்களில் கூட என நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் காத்திருப்போர் பட்டியலில் இடம்பிடிக்கின்றோம் தானே.
இப்படி ஒரு புதிய கதைக்களத்தில் பல்வேறு காரணங்களுக்காக காத்திருப்பவர்களை பற்றி சொல்லும் கதை தான் ‘காத்திருப்போர் பட்டியல்’ என்கிற பெயரிலேயே தற்போது படமாகியுள்ளது.. இது ஒரு நாளில் ஒரு இடத்தில் பல தரப்பட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை.
சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் ஹீரோவாககவும், அட்டகத்தி நந்திதா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளார்.. இயக்குனர்கள் தாசரி நாராயணராவ், பரத்பாலா உட்பட பல இயக்குனர்களிடம், இணை இயக்குனராக பணியாற்றிய பாலையா D. ராஜசேகர். என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.