கடந்த 28 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ‘சின்னக்கலைவாணர்’ விவேக், பல வருடங்களாக பிற மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார். மிகுந்த வற்புறுத்தலின் பேரில், 2௦11ல் மலையாளத்தில் ‘ஒரு நுனக்கதா’ படத்திலும் 2௦13ல் கன்னடத்தில் ‘சந்திரா’ படத்திலும் மட்டுமே நடித்திருந்தார்..
தற்போது ‘பைசா ஹோ பைசா’ என்ற படத்தில் நடித்துள்ளதன் மூலம் இந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ளார் விவேக். துப்பாக்கியை பிடித்தபடி விவேக் நிற்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கவே ஆச்சர்யம் தருகிறது. முக்தா சுந்தர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் மார்ச்-13ல் வெளியாக இருக்கிறது.