“ஒரு ஆக்சன் ஹீரோவை வீல்சேரில் உட்கார வைத்துவிட்டீர்களே” ; விவேக் ருசிகர பேச்சு..!

தனது மகன் பிரசன்னா இறந்தபின் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார் நடிகர் விவேக்.. ஆனால் நேற்று நடைபெற்ற ‘தோழா’ பட பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவரை வற்புறுத்தி அழைத்துவந்தார் கார்த்தி.. ஆம்.. காஸ்மோராவில் கார்த்தியுடன் மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் விவேக்கை, ‘தோழா’விலும் நட்புக்காக ஒரு முக்கியமான கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்து விட்டார்கள் கார்த்தியும் படத்தின் இயக்குனர் வம்சியும்.

விழாவில் பேசிய விவேக், “கடந்த 30 வருடங்களாக ஆக்சன் ஹீரோவாக வளம் வருபவர் நாகார்ஜுனா.. அவரையே படம் முழுவதும் வில் சேரில் உட்கார வைத்துவிட்டார்களே.. தலை தவிர உடம்பின் எந்த பாகமும் அசையாமல் படம் முழுவதும் நடிப்பது சாதாரண விஷயமில்லை.. அதை நாகார்ஜுனா அழகாக செய்திருக்கிறார். படத்தில் நான் ஒரு சிறியே கேரக்டரில் நடித்திருந்தாலும் அனுமார் போல கதைக்கு திருப்பம் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்” என்றும் கூறினார் விவேக்..

இந்தப்படத்தின் இயக்குனர் வம்சி கொஞ்சம் உடல் பருமனானவர்.. அவரை பார்த்து பேசிய விவேக், இயக்குனர் வம்சி ‘பண்டல் ஆப் எனர்ஜி’ கொண்டவர் என அவரது சைஸை கிண்டலடித்ததன் மூலம் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டு சிரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

KarthiNagarjunPVP cinemaTamannaThozhaVamshiVivekகார்த்திதோழாநாகர்ஜூன்விவேக்