வெளியீட்டு வேலைகளில் துரிதம் காட்டும் ‘விஸ்வரூபம்-2’..!


கிட்டத்தட்ட பாகுபலி படத்தைப்போலத்தான், கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான பெரும்பகுதி  காட்சிகளையும் படமாக்கி விட்டார்.. பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியானாலும் விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஸ்வரூபம்-2’ படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்..

ஆனால் படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிதி பிரச்சனை காரணமாக  இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை உறுதியாக கோர முடியாத நிலையில் இருந்தார் ஆகாமல்.. இந்நிலையில் கமல் நடித்துவந்த ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பும் அவற்றுக்கு காலில் அடிபட்டு ஏற்பட்ட காயத்தால் தள்ளிப்போனது..

இந்தநிலையில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கால்ஷீட்டை மீண்டும் ஒன்று சேர்த்து படத்தை துவங்க தாமதமாகும் என்பதால், விஸ்வரூபம்-2’ படத்தை தனது சொந்த ரிஸ்க்கிலேயே வெளிக்கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளார் கமல்..

 இதனால் இறுதிக்கட்டத்தில் உள்ள போஸ்ட் புரடக்சன் பாக்கி பணிகளை துரிதப்படுத்தியுள்ளார் கமல்.. மேலும் தொழில்நுட்ப சிக்கல் மட்டுமல்லாது சட்டரீதியான சிக்கல்களையும் களையும் முயற்சியிலும் கமல் இறங்கியுள்ளாராம். அனேகமாக ஜூன் மாதத்தில் இந்தப்படத்தின் ரிலீஸை எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது.

KamalahassanVishvaroopam 2விஸ்வரூபம்-2