படம் வெளியாகும் முன்பே இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்த விஷ்ணு..!

தனக்கு ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனருடன் அவரது அடுத்த படத்திலும் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் இணைந்து பணியாற்றுவது வழக்கம் தான். விஷ்ணு விஷாலும் இதே பாணியை கடைபிடித்து வருபவர்தான்.. ஆனால் ஆச்சர்யமாக தற்போது தன்னை வைத்து படம் இயக்கிவரும் இயக்குனருக்கு, அந்தப்படம் வெளியாகி ரிசல்ட் தெரியும் முன்னரே தனது அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம் விஷ்ணு விஷால்..

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது நடித்து வரும் படம் ‘கதாநாயகன்’. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். முருகானந்தம் என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த ‘கதாநாயகன்’ படம் நன்றாக வந்திருப்பதாலும், அடுத்ததாக முருகானந்தம் வைத்திருந்த கதை நன்றாக இருந்ததாலும் இந்தப்படம் முடிந்ததும் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தையும் முருகானந்தம் தான் இயக்குகிறாராம். இந்தப்படத்தை துஷ்யந்த் ராம்குமாரின் ‘இஷான் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

KathanayaganVishnu Vishalஇஷான் புரொடக்சன்ஸ்கதாநாயகன்கேத்ரின் தெரெசாதுஷ்யந்த் ராம்குமார்மாவீரன் கிட்டுமுருகானந்தம்விஷ்ணு விஷால்