மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு பின், ஒரு வசனகர்த்தாவாக தனது ஆதிக்கத்தை தமிழ்சினிமாவில் நிலைநாட்டிய எழுத்தாளர் தான் எழுத்தாளர் பாலகுமாரன். எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் கணிசமான அளவில் தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருப்பவர் பாலகுமாரான்.
நாயகன், பாட்ஷா, ஜென்டில்மேன் உட்பட பிளாக் பஸ்டர் படங்களின் உயிர்ப்பான வசனங்களுக்கு சொந்தக்காரர் சாட்சாத் இவரே தான். பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியதும் இவரே தான். பேமஸான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டைட்டில்கூட இவர் எழுதிய புத்தகத்தின் டைட்டில் தான்.
சமீபகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவரை, தற்போது மீண்டும் சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ஆம், தனது புதிய படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் விஷ்ணுவர்தன்.