விஷ்ணு-சூரி கூட்டணியில் ‘வீர தீர சூரன்’ இன்று துவக்கம்..!

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள், கடந்த இரண்டு வருடமாக அடுத்த படத்துக்கான முயற்சியில் இருந்தார். இப்போது விஷ்ணுவை வைத்து ‘வீர தீர சூரன்’ என்கிற படத்தை இயக்க தயாராகிவிட்டார். ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கேத்தரின் தெரசா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் வேத் சங்கர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன் தான் கதை எழுதியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பம்சம். படத்தின் டைட்டில் முருகனை குறிக்கிறது என்பதாலோ என்னவோ இன்று துவங்கவிருக்கும் இந்தப்படத்தின் பூஜையையும் பெசன்ட்நகர் முருகன் கோவிலில் வைத்து நடத்துகின்றனர்.

கேத்தரின் தெரசாசகுனிசங்கர் தயாள்சுசீந்திரன்சூரிவிஷ்ணுவீர தீர சூரன்