மீண்டும் ஜோடி சேரும் விஷால் – லட்சுமிமேனன்

கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிருச்சு.. ‘பாண்டியநாடு’ படத்தில் ஜோடியாக நடித்த விஷாலும் லட்சுமி மேனனும் அடுத்த படத்திலும் ஜோடியாக நடிக்க இருப்பதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘பாண்டியநாடு’ படத்தை பார்த்த பலரும் குறிப்பாக வினியோகஸ்தர்கள் விஷால், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் உயிரோட்டமாகவும் இருக்கின்றன என பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் அடுத்த படத்திலும் இவர்கள் ஜோடி சேர்வது உறுதியாகிவிட்டது. தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு தான் இந்தப்படத்தையும் இயக்க இருக்கிறார். விஷாலே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். லட்சுமி மேனன் புத்திசாலி.. நஸ்ரியா மாதிரி பிரச்சனை பண்ணி தேவையில்லாத சிக்கலில் எல்லாம் மாட்டிக்கொள்ள மாட்டார் என்று நம்புவோம்.

லட்சுமிமேனன்விஷால்
Comments (1)
Add Comment
  • great site

    889887 363566Some genuinely good and utilitarian info on this web web site , likewise I believe the layout has fantastic attributes. 93768